Sunday

சத்திய(மா) சோதனை பதிவு

கதறக் கதற, பிழியப் பிழிய,துள்ளத் துடிக்க நீள நீளமாய் பதிவுகள் எழுத வேண்டுமென ஆசையெல்லாம் படுகிறேன், மேட்டரெல்லாம் கூட நெறய இருக்கு....ஆனால் நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருவாளர் சோம்பேறித்தனத்துடன் அருமையான கூட்டணி அமைத்திருப்பதால் அந்த மாதிரியான பதிவுகளை வாசிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்காமல் போகிறது.

என்ன சொல்ல, நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்....

அயோத்தி தீர்ப்புல எனக்கு உடன்பாடில்லை,அந்த நாள் குத்து வெட்டு இல்லாமல் அமைதியா போனதில் ரொம்பவே சந்தோஷம்.சகிப்புத் தன்மையில் நாம் வளர்கிறோமா என்ன!.

எந்திரன் ரிலீஸ் செய்த ஒரே பதிவர் என்கிற பெருமையை நான் தட்டிச் சென்று விட்டதாக நாளைய சரித்திரம் கூறும்.எனக்கு அதிலெல்லாம் பெரிதாய் ஆர்வமில்லை, போட்ட காசு வந்தால் போதுமென்ற மனநிலையே மேலோங்கியிருக்கிறது. நிச்சயமாக எந்திரன் விமர்சனம் எழுத மாட்டேன் என்ற உறுதியை இங்கே தந்து விடுகிறேன். பிழைத்துப் போங்கள்...

”The Immortals of Meluha” பற்றி எழுதுவதாக ஏற்கனவே கூறியிருந்தேன். இன்னமும் முடிக்கவில்லை, ஆனால் வாசித்தவரையில் சுவாரசியமாய் இருக்கிறது. மிகப் பெரிய பிம்பமான சிவனை, ஒரு சாமானிய இளைஞனாய் கற்பனை செய்வதும், அவரின் எண்ண் ஓட்டத்தில் கூடவே பயணிப்பதும் சுவாரசியமாய் இருக்கிறது.விரிவாய் எழுதிட வேண்டிய விமர்சனம் அது, இதை ஒரு ட்ரெயிலராக வைத்துக் கொள்ளலாம்...சினிமாக்காரன் புத்தி!

மகாத்மாக்கள் ஒரு நூற்றாண்டுக்கு ஒருத்தர்தான் பிறப்பாஙக்ளாம். அந்த கணக்குல பார்த்தா 1969ல பிற்ந்த மஹாத்மாவை மக்கள் எப்ப தெரிஞ்சுக்குவாங்கன்னு தெரியலையே!...ம்ம்ம்ம், விதி வலியது!


11 comments:

மங்கை said...

///ஆனால் நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருவாளர் சோம்பேறித்தனத்துடன் அருமையான கூட்டனி அமைத்திருப்பதால் அந்த மாதிரியான பதிவுகளை வாசிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்காமல் போகிறது.//

இதெல்லாம் தப்பிக்க்றதுக்கு வழி... எழுதறேனு சொன்னதையாவது சீக்கிறம் எழுதுங்க... அயோத்தி பத்தி எழுதுங்க... எந்திரன் பத்தி..அத்தன காசு போட்டு படம் எடுத்தாங்களே...இப்ப பெரிய ஹிட்டாமே...அது உங்க பார்வையில எப்படினு எழுதுங்க.... இப்படியே தப்பிச்சுட்டு இருந்தா எப்படி

டுபாக்கூர் பதிவர் said...

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இந்த முதல் பின்னூட்டம்..

அருமையான பதிவு!, படித்து விட்டு வெகு நேரம் பிரம்மை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தேன், என்ன ஒரு எழுத்து...சாருமோகம், ஜெய நிவேதிதா எல்லாம் உங்கள் எழுத்தின் முன்னால் பிச்சை வாங்க வேண்டும்.

உங்களை நேரில் பார்த்தால் கட்டியனைத்து முத்தம் கொடுத்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

தோழி said...

// நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருவாளர் சோம்பேறித்தனத்துடன் அருமையான கூட்டணி அமைத்திருப்பதால் ///

இதிலயுமா கூட்டணி :(

// ”The Immortals of Meluha” பற்றி எழுதுவதாக ஏற்கனவே கூறியிருந்தேன். இன்னமும் முடிக்கவில்லை //

சீக்கிரமா படிச்சு முடிச்சு விளக்கமா எழுதுங்க...

// நிச்சயமாக எந்திரன் விமர்சனம் எழுத மாட்டேன் என்ற உறுதியை இங்கே தந்து விடுகிறேன். ///

தப்பிச்சோம் எங்க பார்த்தாலும் எந்திரன் பதிவாகவே இருக்கு... கொஞ்ச நாளைக்கு பதிவுகள் படிக்க போறதில்லேன்னு இருக்கேன்..

டுபாக்கூர் பதிவர் said...

என்ன கொடுமை இது!, இப்படில்லாம் அவசரபட்டு முதல் பின்னூட்டம் போட்டால், என்னுடைய ஆல்ட்டர் ஈகோவோட பின்னூட்டத்தை எபப்டி போடறது...

தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு மதிப்பில்லை.... :))

டுபாக்கூர் பதிவர் said...

நாலு கமெண்ட்டெல்லாம் இந்த பதிவுக்கு டூமச்!, அடுத்த பதிவுல இருந்து வாசகர்கள் எழுதின கடிதம் போட்ற வேண்டியதுதான்...ம்ம்ம்ம்

தமிழ் அமுதன் said...

படத்த ரிலீஸ் பண்ணிட்டு விமர்சனம் எழுதாட்டி எப்படி...?

chandru2110 said...

நம்ம ஆளோட கூட்டு வச்சுருக்கீங்களே , அது போதும் நீங்க இன்னும் நிறைய சாதீப்பீங்க.

chandru2110 said...

நான் யாரை சொல்லுறேன்னு அவங்களுக்கு புரிஞ்சுட்டுங்க, உங்களுக்கு புரியலைன்னா அவங்கள்ட்ட கேளுங்க.

பயணமும் எண்ணங்களும் said...

டுபாக்கூர் பதிவர் said...

புன்னகை தேசம், புளுகு தேசமா?

ஒன்னும் புரியலை!
September 24, 2010 9:23 PM

-------------------------------------------நண்பரே உங்க பதில் படித்தேன்

கீழே என் பதிவையும் படித்து பார்த்து உண்மை அறிந்திட..


புனைவு, புரளி என பலியாக்குதல் தொடர்ச்சியாக


http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html
நுணலும் தன் வாயால் கெடும்.. - எத்தனை நிஜம்.?

காட்டாறு said...

நான் வாசிச்சிட்டேன் ‘The Immortals of Meluha’.

நடுவுல அந்த 5 சிம்பல்களுக்கும் அர்த்தம் கண்டுபிடிச்சீங்களா? எனக்கு கூகிள் ஆண்டவர் உதவி செய்தார். விமர்சனம் எழுதுங்க சீக்கிரம்.

என்.ஆர்.சிபி said...

//1969ல பிற்ந்த//

அட! சமீபத்தில்தான் பிறந்தீங்களா?

Post a Comment