Monday

நந்தா என் நிலா!...நந்தா நீ என்ன்ன்ன்ன்ன் நிலா....!சில பல நாட்களாய் தேடிக் கொண்டிருந்த பாடல், கொஞ்சம் முன்னால் சிக்கியது.

என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே வைத்துவிட்டு, மூணு நிமிடமும் பதினைந்து நொடிகளும் ஒதுக்கி இந்த பாட்டை ஒரு தடவை கேட்டுவிடுங்கள். நான் திரும்ப திரும்ப ஓடவிட்டுக் கொண்டே இந்த பதிவை தட்டிக் கொண்டிருக்கிறேன்.

0.26 முதல் 0.58 வரையில் திரும்ப தனியே கேட்டுப் பாருங்கள், தமிழ் எனக்கு தாய் மொழியாக வாய்த்ததை நினைத்து செம்மாந்து போகும் தருணங்கள் அவை....பாலசுப்பிரமணியத்தைத் தவிர வேறு யாராலும் இத்தனை உயிர்ப்புடன் பாடியிருக்க முடியுமா தெரியவில்லை....

நாள்பட்ட ஒயின் தரும் கிறக்கத்தையும் இந்த பாடல் தூக்கிச் சாப்பிடும்....

1977ல் வெளியான பாடல். தர்மாவதி ராகத்தினை அடிப்படையாகக் கொண்டது.தட்சினாமூர்த்தி என்கிற பழம்பெரும் இசையமைப்பாளரின் கைவண்ணம்.

Tuesday

சைக்கிள் கேப்ல...ட்ரக் ஓட்றதுன்னா, இதுதான்!

Thursday

தலைவர் கலைஞருக்கு நன்றி!

தமிழக அரசின் இலவச தொலைகாட்சிப் பெட்டி என் மாதிரியான எழைக்கும் கிடைத்து விட்டது என்பதை தலைவர் கலைஞர் அவர்களுக்கும், வலைபேசும் தமிழுலகத்திற்கும் இதயம் இனிக்க, கண்கள் பனிக்க தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மட்டும் இந்த பெட்டி கிடைத்திடவில்லை நண்பர்களே!, எங்கள் பகுதியில் இருக்கு அத்தனை ஏழைகளுக்கும் கிடைத்திருக்கின்றது.

எங்கள் பகுதியின் ஏழ்மை எத்தகையது என்பதை இதை வாசிக்கும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். வீட்டுக்கு இரண்டு கார்கள் இருந்தாலும் பொருளாதார நெருக்கடியால் ஒருவர் ஒரு காரில் மட்டுமே பயணம் செய்யும் துர்பாக்கியசாலிகள். தமிழக அரசின் கடைக்கண் இந்த மாதிரியான சமூகத்தினர் மீதும் பதிந்திருப்பதை நினைக்கும் போது தமிழகத்தில் சமூகநீதி எந்த அளவுக்கு பேணப்படுகிறது என்பதை நினைத்து அனைவருமே பெருமைப் படவேண்டும்.

இத்தனை இருந்தும், விடுமுறைகளில் வரும் பேரன்கள் கொண்டுவரும் xbox இதில் இனைத்து விளையாடமுடியுமா என்பதே இப்போதைக்கு என் அம்மாவின் கவலையாயிருக்கிறது.இதையெல்லாம் ”எல்காட்”டின் அப்போதைய சேர்மனான உமாசங்கர் யோசித்திருப்பாரா தெரியவில்லை,அவர் மீதான நடவடிக்கைகளுக்கு இதையும் ஒரு காரணமாக நாளைக்கு தலைவர் தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டிட விரும்புகிறேன்.

அடுத்த தேர்தலுக்கு குட்டியாக வீட்டுக்கொரு ஃப்ரிட்ஜ் கொடுக்கலாம் என்பதும் என் தாயாரின் ஆலோசனை!, தலைவர் கலைஞர் இதையெல்லாம் சிந்தித்து அடுத்த இலவசத்தை அறிவிக்க எல்லாம் வல்ல ஜெயலலிதா நாச்சியார்(எத்தனை நாளைக்குத்தான் அம்மான்னே சொல்றது!) அருள் புரியட்டும்.

Tuesday

பெண்களுக்கானது.....!

பெண்கள் சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிக்கும் பிரச்சினைக்கு ஆசனம் மற்றும் முத்திரைகளைக் கொண்டு தீர்வு சொல்லியிருக்கின்றனர். பயன் தரும் கட்டுரை....!

http://www.bukisa.com/articles/197606_yoga-for-menstrual-problems

Monday

மொட்டைமாடி தோட்டம்

ஏரும் இல்லாமல் சேரும் இல்லாமல் நீரை மட்டும் கொண்டு செய்யும் விவசாயமுறைதான் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம். ஓரளவுக்கு தகவல் சேகரித்தாயிற்று....அடுத்து பரிசோதனைகள்தான், விரைவில் படம் காட்டுகிறேன்!

காகித தொட்டி...

ஹைட்ரோபோனிக்ஸ் தொழில் நுட்பம் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். அதையெல்லாம் சேகரித்து வைக்க வேண்டியிருக்கிறது.


How to Create Seed-Starting Pots From Newspapers -- powered by eHow.com

Sunday

கல கல ரஜினி !

எந்திரன் ஹிந்தி பாடல்கள் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதன் யூட்யூப் வீடியோ கீழே!, மனிதர் எத்தனை இயல்பாய் பேசுகிறார். தமிழக மேடைகளில் காட்டும் இறுக்கமோ, அழுத்தமோ சுத்தமாய் இல்லை.சூப்பர் ஸ்டார்கள் தங்கள் மண்ணில் இயல்பாய் இருப்பது கூட கடினம்தான் போல!


Friday

பக்கம் நிரப்புதல்.....

ராவணன் நேற்றைக்குத்தான் முழுமையாக பார்த்தேன்....நிச்சயமாக இது விமர்சன பதிவில்லை. விமர்சிக்க தகுதி வேண்டும். நூறு ரூபாய் கொடுத்துவிட்டால் மட்டுமே அந்த தகுதி வந்து விடுவதாக எல்லாரும் நினைத்துக் கொள்கிறோம். இதைத் தாண்டிய விஷய ஞானமும், விருப்பு வெறுப்புக்கு அப்பாற் பட்ட அணுகு முறையும் விமர்சகனுக்கு அவசியமாகிறது.

போஸ்ட்டர் ஒட்டுகிறவனும் சினிமாக்காரன்தான், என் மாதிரி திரையரங்கத்தானும் சினிமாக்காரன்தான். ஆனால் என்னை சினிமாக்காரன் என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் உடன்பாடில்லை. நான் வியாபாரி மட்டுமே!.....ஓடுகிற குதிரையில் மட்டுமே காசு போட நினைக்கிற வியாபாரி. நாற்பதாண்டுகளாய் இதையே செய்து கொண்டிருக்கும் குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை ஆள்....சுயபுராணம்!

ஒரு வர்த்தகனின் பார்வையில் ராவணன் தமிழுக்கான படமில்லை .நேரடி ஹிந்திப் படமாக செய்திருந்தால் இன்னமும் அடர்த்தியாக செய்திருக்க வாய்ப்பிருக்கிற படம் இது. கலாச்சார சமரசங்கள் அன்னியத் தன்மையை நிறையவே அள்ளித் தெளித்து விட்டது.தமிழில் படம் செய்து தன் தமிழ் அடையாளத்தை நிறுவிக் கொள்ள வேண்டிய நிர்பந்தந்திற்கு மணிரத்னம் மற்றும் அவர் குழுவினரின் பெருமளவு உழைப்பு விழலுக்கு இறைத்த நீராய் போனது சோகம்தான்.

ராவணன் படத்தைக் காட்டிலும் இருவர் மிக நேர்த்தியான தயாரிப்பு என்பது என்னுடைய தனிக் கருத்து. மொழியும் கலாச்சாரமும் இருந்தும் கதை நாயகர்களாய் நடிக்க தமிழக கலைஞர்கள் தயங்கினார்கள் அல்லது தவிர்த்தார்கள் என்பது பதிவு செய்யப் படாத வரலாறு.மோகன்லால் பாத்திரத்திற்கு நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட நாயகர்களை அணுகியதும் அவர்கள் தயங்கியதால் கடைசியில் ஒரு மளையாளி தமிழர்களின் நாயகனாய் வலம் வந்தார்.

மோகன்லாலின் அன்னியத் தன்மை திரையரங்குகளை விட்டு படம் ஓட காரணமாய் போனது. ஆனால் காலத்தே நிற்கும் கலை படைப்பு இருவர். இசையும், ஒளிப்பதிவும் இந்த படத்தின் சிறப்புகளில் ஒன்று, Mood lighting என்கிற வித்தைக்கு இந்த் படத்தினை உதாரணம் காட்டலாம். குறைகள் இல்லாமலில்லை, அதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதுமில்லை.

Wednesday

இனி ட்விட்டரிலும்.....

பிரபல பதிவரான பின்னாடி இதெல்லாம் தேவையான தேவை!......அதான் ஒரு கணக்கு ஆரம்பிச்சாச்சு!

”மனவரிகளை தட்ட இன்னொரு முகவரி!”

முத்திரைகள்....பயன்களும், பலன்களும்....!.உடல் நலம் பேண விரும்புவோர் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது இந்த முத்திரைகள். தமிழகத்தில் அத்தனை பிரபல்யமாகாத ஓர் கலை....இனையம் மேய்ந்த வேளையில் கிடைத்தது. பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

....

Tuesday

வாய்தா ராணி!

அஞ்சா (!)நெஞ்சன் அழகிரியின் மதுரை தி.மு.க ஜெயலலிதாவுக்கு கொடுத்திருக்கும் பட்டம்தான் இந்த வாய்தா ராணி....எப்படித்தான் யோசிக்கிறாய்ங்களோ தெரியலை, மதுரையில இருக்கற அ.தி.மு.க காரங்க எல்லாம் என்ன பண்ணீட்டு இருக்காய்ங்கன்னு தெரியல....

அதிலும் ஜெயலலிதாவும், சரிக்கலாவும் நடமாடும் நகைக்கடையாய் எடுத்துக் கொண்ட படங்கள் பத்து பதினைந்து அடி உயர போஸ்டரில் வாய்தா ராணி என்கிற டயலாக்குடன் பார்க்கும் போது நிச்சயமாய் ஒரு எஃபெக்ட் வரத்தான் செய்கிறது. மதுரையில் முக்கியமான இடமெல்லாம் இந்த மாதிரியான போஸ்ட்டர்கள்தான் நீக்கமற நிறைந்திருக்கிறது.

”சென்னைக்கு கள்ள டிக்கெட்டில் ரயிலேறிவந்த கருணாநிதி”ன்னு தரமிரங்கி பேசிய ஜெயலலிதாவுக்கு இப்படித்தான் ஆப்படிக்கனும்னு நம்ம தி.மு.க சகா ஒருத்தர் சொல்றார். நேற்றைக்கு கோவையில் பேசிய கலைஞர் கூட இந்த மரியாதை குறைவை ”வலிக்குது ஆனா வலிக்கலை”ன்ற மாதிரி பேசீயிருக்கார்.

இனி, அதிமுக பக்கம் இருந்து என்ன ரீயாக்‌ஷன் வருதுன்னு பார்ப்போம்....இவுகளால நமக்கு பொழுதாவுது போவுது!

எது எப்படியோ....இந்த வாய்தா ராணி பட்டம் கேட்சியா(Catchy) இருக்குல்ல!