Thursday

சந்திரபோஸ் போய்ட்டாராமாம் !

இளையராஜா என்கிற பெரு வெளிச்சத்தின் முன்னால் துக்குணூண்டு மின்மினிகளாய் வெளிச்சம் காட்டிய இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்திரபோஸ் காலம் ஆகிவிட்டார். AVM நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரோ என்று நினைக்கிற வகையில் இவருக்கும்,AVM நிறுவனத்துக்குமான தொடர்பு இருந்தது. தொலைக்காட்சி தொடர் எடுக்க வந்த போது கூட இவரைத்தான் அவர்கள் பயன் படுத்தினர்.

மூன்று ரஜினி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது கொஞ்சம் ஆச்சர்யமான செய்திதான்...இசையமைப்பாளர் சந்திரபோசை நான் ரசித்ததாக இப்போது கூறினால் அது அப்பட்டமான பொய்யாகவே இருக்கும். ஆனால் அவர் பாடிய ஒரே ஒரு பாட்டுக்கு நான் அநியாய ரசிகன்....ம்ம்ம்ம், ஏண்டி முத்தம்மாவைத்தான் சொல்கிறேன்.

தூங்கி வழியும் நீர்நிலை, படகு,தனிமை, நீங்கள் இவையெல்லாம் சேரும்போது, இந்த பாடலை கேட்டுப் பாருங்கள்...அந்த சூழல் தரும் உணர்வுதான் சொர்கம். சந்திரபோஸ் இழைந்திருப்பார் இந்த பாடலில், ப்கிர்ந்து கொள்ளலாமென இனையத்தில் தேடினால், அவரே ரிமிக்ஸ் செய்ததாக ஒரு ஒளித் துணுக்கு கிடைத்தது....முள்ளைத் தாண்டி ரோஜாவை ரசிப்பதைப் போல, இந்த பாடலை கேட்டுப் பாருங்கள்.


ராமர் மசூதி!

தீர்ப்பு ஒரு வாரம் தள்ளிப் போயிருக்கிறது....

நான் இந்துவாய் பிறந்திருப்பதால், அந்த இடத்தை மசூதிக்கு கொடுக்கவே விரும்புகிறேன். ஒரு வேளை முஸ்லீமாய் பிறந்திருந்தால் கோவிலுக்கு விட்டுக் கொடுத்திருப்பேனோ என்னவோ!

எனது நம்பிக்கைகள் மட்டுமே என்னை மகிழ்ச்சியில் வைத்திருக்கின்றன!

கடவுள்கள் பாவம்தான்!

Saturday

பிள்ளையாரும், பிள்ளை யானும்....!

நினைவு தெரிந்த காலங்களில், சுமாராக பரிட்சை எழுதி இருந்தால் கூடுதல் மார்க் போடுபவராகவும், எதுவுமே எழுதாவிட்டால் பாஸாக்கிவிடுகிற ஆபத்பாந்தவனாகவே அறிமுகமாகி இருந்தார். ஆனால் வளர வளர என்னளவில் அந்த நம்பிக்கையை சுக்குநூறாக்கிய பெருமை அவருக்கு உண்டு.

வயசுக்கு வந்த பின்னர், கோரிக்கைகள் மாறியிருந்தன. சில, பலரின் கடைக்கண் பார்வைகளுக்கு அவரிடம் மனுப் போட்டேன். காக்காய் உட்கார்ந்ததா அல்லது பனம் பழம் தானாய் விழுந்ததா என்பது தெரியாது.சில, பல நிகழ்வுகளும், சந்தோஷங்களும், அதன் தொடர்ச்சியான சோகங்களையும் நடந்தேறியது.இப்படியான அனுபவங்களினால் வெறுத்துப் போய் ஒரு கட்டத்தில் என்னை நாத்திகனாய் மாற்றியதில் ஆனைமுகத்தானுக்கு குறிப்பிடத் தக்க பங்கு இருந்தது.

எங்கள் கல்லூரியின் பின்னால் ”மயில்காடு” என்று ஒரு காடு இருந்தது. இப்போது அந்த காடு இல்லை,அழித்து விட்டார்கள். அந்த காட்டின் நடுவில் ஒரு பெரிய மேடையின் நடுவே ஒற்றை ஆளாய் ஒரு பிள்ளையார் இருந்தார். அவருக்கு பூசைகள் எல்லாம் கிடையாது, ஏனெனில் அந்த வனாந்திர பகுதியில் ஆட்கள் நடமாடாத காலம் அது...அந்த காடு தந்த தனிமையும், அமைதியும் எங்கள் குழுவிற்கு பிடித்திருந்ததால் கல்லூரி நாட்களில் ஆறாவது நண்பராகவே இருந்தார் பிள்ளையார்.கல்லூரி நாட்களுக்குப் பின்னால் தொழிலில் காலடி எடுத்து வைத்ததும் ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்றுதான், அந்தக் கணக்கில் பார்த்தால் இன்றோடு பதினெட்டு வருட சர்வீஸ் ஆகிவிட்டது.

பிள்ளையார் குறித்து எனக்கு பல விமர்சனங்கள் உண்டு...ஆனாலும் பரஸ்பர சகிப்புத் தன்மையினால் இன்று வரை பிரியாமல் கூடவே இருக்கிறோம். கடவுள் என்பதற்கும் மேலே கூட்டாளி மாதிரியான ஒரு உறவு எங்களுக்குள்...இன்றைக்கு அவருக்கு பிறந்த நாள்!

ஹேப்பி பர்த்டே பாஸ்!

Wednesday

”பீப்லி” (லைவ்), இது விமர்சனமில்லை!

நேற்றைக்கு பீப்லி (லைவ்), என்கிற ஹிந்திப் படம் பார்க்க நேர்ந்தது, ஆச்சர்யமாய் முழு படமும் பார்க்கும் பொறுமை நேற்று என்னிடம் இருந்தது. இதை இயக்குனரின் வெற்றியாகவே கருதுகிறேன். ஏனெனில், நான் முழுசாய் உட்கார்ந்து பார்த்த கடைசி படம் “பூ”, புதிதாய் வருகிற எல்லா தமிழ்ப் படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வாய்ப்பும், வசதியும் இருந்தும் பத்திருபது நிமிடங்களுக்கு மேல் அவைகளாஇ சகித்துக் கொள்ளும் பொறுமை எனக்கு இருந்ததில்லை.

பயந்து விடாதீர்கள்!, படத்தின் விமர்சனம் எல்லாம் இங்கே எழுதப் போவதில்லை, அதற்கென நிறைய ஆட்கள் இங்கே நிரம்பியிருக்கிறார்கள். நான் பகிர விரும்புவது இந்த படத்தின் தயாரிப்பு அம்சம்தான்.....பெரிதான கள அமைப்பில்லாது, ஒரு சிறிய ஓட்டு வீட்டின் முன்னாலே எந்த சலிப்புமில்லாது மொத்த கதையும் ஓடி முடிந்து விடுகிறது. பத்துக் கோடி தயாரிப்பு செலவு என்கிறார்கள், எனது அனுமானத்தில் அதில் பாதிக்கும் குறைவான தொகைக்கு மேல் செலவு ஆகியிருக்காது.

இந்த படத்தின் இன்னொரு ஆச்சர்யமான விஷயம்....இசை! , இந்த பாடல் ஒரு சாட்சி!


ஹிந்தி தெரிந்திருந்தால் மட்டுமே இந்த படத்தினை முழுமையாக ரசிக்க முடியும். பார்த்தே தீர வேண்டிய படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்,வாய்ப்பு கிடைத்தால் பார்த்து விடுங்கள்.

அமீஷ் திரிபாதி எழுதிய “The Immortals of Meluha” வாசித்துக் கொண்டிருக்கிறேன், கொஞ்சம் சுவாரசியமான புத்தகம். தனியே விரிவாய், விரைவில் எழுதுகிறேன்.

முரளிக்காக....



அப்பாவியாய், அழுத்திச் சொல்லத் தெரியாத அசட்டு இளைஞராகவே இறுதிவரை திரைமுகம் காட்டிய மனிதர். இனி நம்மோடு இல்லை....ம்ம்ம்ம்ம்

”முரளி”க்காக மட்டுமே போடப் பட்ட பதிவு இது!

Sunday

அதுனால இனிமேல..... !

United States Department of Agriculture Nutritional Data for Milk and Beer

MILK (I cup, 2% milk)
BEER (I cup)
Fat (g)
5
0
Fiber (g)
0
.5
Sodium (mg)
122
12
Cholesterol (mg)
20
0
Calories
122
97
Calories from fat (%)
37
0
http://www.milksucks.com

Saturday

ஞான முத்ரா!