Wednesday

சிங்கம்ம்ம்ம்ம்ம்.....

இந்த ஆள் என்னுடைய ஆதர்சம்...இவரைப் போல எழுதிட வேண்டுமென பல காலமாக நினைத்து கொண்டிருக்கிறேன், எழுதினேனா என்பது வேறு விஷய்ம். எழுபது வருடங்களுக்கு மேலாக பத்திரிக்கை துறையில் தீவிரமாய் இயங்கிவருபவர். இப்போது வயதின் காரணமாய் உடல் தளர்ந்திருந்தாலும் இளமை நிரம்பி வழியும் எழுத்தாளர்.

அவரின் எழுத்துக்களில் திமிறும் இளமையும்,ததும்பும் நகைச்சுவையும் வாசித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்....வார்த்தைகளால் இங்கே சொல்லிவிட முடியாது.அரசியல் கட்டுரகளில் இவரால் பந்தாடப் படாத அரசியல்வாதிகள் சொற்பமே...கொஞ்சமும் தன்னை சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளன் இவர்.

தொண்ணூற்று ஆறு வயதில் தனது கடைசி நாவல் என்று சொல்லி தற்போது ஒரு புதினத்தை வெளியிட இருக்கிறார்(The Sunset club).சமீபத்தில் அவரின் பேட்டி ஒன்றினை பார்க்க நேர்ந்தது.தேடிப் பிடித்து அதன் இனைப்பை இங்கே தந்திருக்கிறேன்.பார்த்து விட்டு சொல்லுங்கள்...இந்த எழுத்து சிங்கத்தின் வீச்சினை...

இத்தனை சொல்லும் போதே தெரிந்திருக்க வேண்டும்...அவர் யாரென, தெரியாதவர்களுக்கு அவர் திரு.குஷ்வந்த் சிங்.

8 comments:

மங்கை said...

நாவல் எழுதினாலும் சரி, நான்கு வரி எழுதினாலும் சரி, எழுதுவதை சுவாரசியமா எழுதனும்ன்னு முனைப்போட, சின்சியரா எழுதுபவர்.. போனா மாசம் இவரோட பேட்டி frontline ல வந்துச்சு

chandru2110 said...

Really good man for world.

Bala said...

அட்டகாசமான நக்கல் கலந்த கொஞ்சம் செக்சியான, பெரும்பாலும் தன்னை மையப்படுத்தி அவர் எழுதும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் அதிகம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் அப்படி இல்லை என்று கேள்வி பட்டேன்.

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே...

ஹரிஸ் Harish said...

சார் பாஸ்..இவர பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது..அவரை பற்றி எழுதுங்கள்..படிச்சி தெரிஞ்சிக்கிறேன்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Interesting person..though bit sexy...

சிவகுமாரன் said...

இவருடைய அரசியல் கட்டுரைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

Ramesh said...

worst post ever..u should close all your blogs..its not entertaing us,

மாலதி said...

பகிர்ந்தமைக்கு நன்றி

Post a Comment