நேற்றைக்கு பீப்லி (லைவ்), என்கிற ஹிந்திப் படம் பார்க்க நேர்ந்தது, ஆச்சர்யமாய் முழு படமும் பார்க்கும் பொறுமை நேற்று என்னிடம் இருந்தது. இதை இயக்குனரின் வெற்றியாகவே கருதுகிறேன். ஏனெனில், நான் முழுசாய் உட்கார்ந்து பார்த்த கடைசி படம் “பூ”, புதிதாய் வருகிற எல்லா தமிழ்ப் படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வாய்ப்பும், வசதியும் இருந்தும் பத்திருபது நிமிடங்களுக்கு மேல் அவைகளாஇ சகித்துக் கொள்ளும் பொறுமை எனக்கு இருந்ததில்லை.
பயந்து விடாதீர்கள்!, படத்தின் விமர்சனம் எல்லாம் இங்கே எழுதப் போவதில்லை, அதற்கென நிறைய ஆட்கள் இங்கே நிரம்பியிருக்கிறார்கள். நான் பகிர விரும்புவது இந்த படத்தின் தயாரிப்பு அம்சம்தான்.....பெரிதான கள அமைப்பில்லாது, ஒரு சிறிய ஓட்டு வீட்டின் முன்னாலே எந்த சலிப்புமில்லாது மொத்த கதையும் ஓடி முடிந்து விடுகிறது. பத்துக் கோடி தயாரிப்பு செலவு என்கிறார்கள், எனது அனுமானத்தில் அதில் பாதிக்கும் குறைவான தொகைக்கு மேல் செலவு ஆகியிருக்காது.
இந்த படத்தின் இன்னொரு ஆச்சர்யமான விஷயம்....இசை! , இந்த பாடல் ஒரு சாட்சி!
ஹிந்தி தெரிந்திருந்தால் மட்டுமே இந்த படத்தினை முழுமையாக ரசிக்க முடியும். பார்த்தே தீர வேண்டிய படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்,வாய்ப்பு கிடைத்தால் பார்த்து விடுங்கள்.
அமீஷ் திரிபாதி எழுதிய “The Immortals of Meluha” வாசித்துக் கொண்டிருக்கிறேன், கொஞ்சம் சுவாரசியமான புத்தகம். தனியே விரிவாய், விரைவில் எழுதுகிறேன்.
1 comments:
//அமீஷ் திரிபாதி எழுதிய “The Immortals of Meluha” வாசித்துக் கொண்டிருக்கிறேன், கொஞ்சம் சுவாரசியமான புத்தகம். தனியே விரிவாய், விரைவில் எழுதுகிறேன்.//
மறக்காமல் விரைவில் எழுதுங்க நாங்களும் தெரிஞ்சுக்கறோம்..
Post a Comment