இளையராஜா என்கிற பெரு வெளிச்சத்தின் முன்னால் துக்குணூண்டு மின்மினிகளாய் வெளிச்சம் காட்டிய இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்திரபோஸ் காலம் ஆகிவிட்டார். AVM நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரோ என்று நினைக்கிற வகையில் இவருக்கும்,AVM நிறுவனத்துக்குமான தொடர்பு இருந்தது. தொலைக்காட்சி தொடர் எடுக்க வந்த போது கூட இவரைத்தான் அவர்கள் பயன் படுத்தினர்.
மூன்று ரஜினி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது கொஞ்சம் ஆச்சர்யமான செய்திதான்...இசையமைப்பாளர் சந்திரபோசை நான் ரசித்ததாக இப்போது கூறினால் அது அப்பட்டமான பொய்யாகவே இருக்கும். ஆனால் அவர் பாடிய ஒரே ஒரு பாட்டுக்கு நான் அநியாய ரசிகன்....ம்ம்ம்ம், ஏண்டி முத்தம்மாவைத்தான் சொல்கிறேன்.
தூங்கி வழியும் நீர்நிலை, படகு,தனிமை, நீங்கள் இவையெல்லாம் சேரும்போது, இந்த பாடலை கேட்டுப் பாருங்கள்...அந்த சூழல் தரும் உணர்வுதான் சொர்கம். சந்திரபோஸ் இழைந்திருப்பார் இந்த பாடலில், ப்கிர்ந்து கொள்ளலாமென இனையத்தில் தேடினால், அவரே ரிமிக்ஸ் செய்ததாக ஒரு ஒளித் துணுக்கு கிடைத்தது....முள்ளைத் தாண்டி ரோஜாவை ரசிப்பதைப் போல, இந்த பாடலை கேட்டுப் பாருங்கள்.
3 comments:
/// தூங்கி வழியும் நீர்நிலை, படகு,தனிமை, நீங்கள் இவையெல்லாம் சேரும்போது, இந்த பாடலை கேட்டுப் பாருங்கள்...அந்த சூழல் தரும் உணர்வுதான் சொர்கம்... ///
எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் ரசிக்க நேரமிருக்கு?
நல்ல ரசிகரா இருப்பீங்க போல..
அண்ணனா நகர் முதல் தெரு-ல வர மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு. ....
Post a Comment