அஞ்சா (!)நெஞ்சன் அழகிரியின் மதுரை தி.மு.க ஜெயலலிதாவுக்கு கொடுத்திருக்கும் பட்டம்தான் இந்த வாய்தா ராணி....எப்படித்தான் யோசிக்கிறாய்ங்களோ தெரியலை, மதுரையில இருக்கற அ.தி.மு.க காரங்க எல்லாம் என்ன பண்ணீட்டு இருக்காய்ங்கன்னு தெரியல....
அதிலும் ஜெயலலிதாவும், சரிக்கலாவும் நடமாடும் நகைக்கடையாய் எடுத்துக் கொண்ட படங்கள் பத்து பதினைந்து அடி உயர போஸ்டரில் வாய்தா ராணி என்கிற டயலாக்குடன் பார்க்கும் போது நிச்சயமாய் ஒரு எஃபெக்ட் வரத்தான் செய்கிறது. மதுரையில் முக்கியமான இடமெல்லாம் இந்த மாதிரியான போஸ்ட்டர்கள்தான் நீக்கமற நிறைந்திருக்கிறது.
”சென்னைக்கு கள்ள டிக்கெட்டில் ரயிலேறிவந்த கருணாநிதி”ன்னு தரமிரங்கி பேசிய ஜெயலலிதாவுக்கு இப்படித்தான் ஆப்படிக்கனும்னு நம்ம தி.மு.க சகா ஒருத்தர் சொல்றார். நேற்றைக்கு கோவையில் பேசிய கலைஞர் கூட இந்த மரியாதை குறைவை ”வலிக்குது ஆனா வலிக்கலை”ன்ற மாதிரி பேசீயிருக்கார்.
இனி, அதிமுக பக்கம் இருந்து என்ன ரீயாக்ஷன் வருதுன்னு பார்ப்போம்....இவுகளால நமக்கு பொழுதாவுது போவுது!
இனி, அதிமுக பக்கம் இருந்து என்ன ரீயாக்ஷன் வருதுன்னு பார்ப்போம்....இவுகளால நமக்கு பொழுதாவுது போவுது!
எது எப்படியோ....இந்த வாய்தா ராணி பட்டம் கேட்சியா(Catchy) இருக்குல்ல!
3 comments:
அண்ணே... நீங்க பங்காளி ஆனா இல்ல... சரியா?
ஆத்தா! உங்க காலை காட்டுங்க...விழுந்துர்றேன்! :))
இந்த வருட டிசம்பர்ல ரெடியா இருங்க. :)
Post a Comment