Monday

நந்தா என் நிலா!...நந்தா நீ என்ன்ன்ன்ன்ன் நிலா....!



சில பல நாட்களாய் தேடிக் கொண்டிருந்த பாடல், கொஞ்சம் முன்னால் சிக்கியது.

என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே வைத்துவிட்டு, மூணு நிமிடமும் பதினைந்து நொடிகளும் ஒதுக்கி இந்த பாட்டை ஒரு தடவை கேட்டுவிடுங்கள். நான் திரும்ப திரும்ப ஓடவிட்டுக் கொண்டே இந்த பதிவை தட்டிக் கொண்டிருக்கிறேன்.

0.26 முதல் 0.58 வரையில் திரும்ப தனியே கேட்டுப் பாருங்கள், தமிழ் எனக்கு தாய் மொழியாக வாய்த்ததை நினைத்து செம்மாந்து போகும் தருணங்கள் அவை....பாலசுப்பிரமணியத்தைத் தவிர வேறு யாராலும் இத்தனை உயிர்ப்புடன் பாடியிருக்க முடியுமா தெரியவில்லை....

நாள்பட்ட ஒயின் தரும் கிறக்கத்தையும் இந்த பாடல் தூக்கிச் சாப்பிடும்....

1977ல் வெளியான பாடல். தர்மாவதி ராகத்தினை அடிப்படையாகக் கொண்டது.தட்சினாமூர்த்தி என்கிற பழம்பெரும் இசையமைப்பாளரின் கைவண்ணம்.

6 comments:

தோழி said...

// 1977ல் வெளியான பாடல்.//


இருபத்தி மூணு வருசமா தேடறீங்களா?

டுபாக்கூர் பதிவர் said...

யுவர் ஆனர்! போட்டதே நாலுவரிபதிவு, அதைக்கூட நீங்க சரியா வாசிக்கலை...

சில பல நாட்களாய் தேடிக் கொண்டிருந்த பாடல்...ன்னு தெளிவா போட்ருக்கேன் யுவர் ஆனர்! :))

தமிழ் அமுதன் said...

நன்றி..!

///நாள்பட்ட ஒயின் தரும் கிறக்கத்தையும் இந்த பாடல் தூக்கிச் சாப்பிடும்....///

இது...எப்படி...நீங்க...?;)

skarthee3 said...

வணக்கம் சார் !!
எக்காலத்திலும் எல்லோராலும் விரும்பப்படும் பாடல்களில் இதுவும் ஒன்று !!
"1977ல் வெளியான பாடல். தர்மாவதி ராகத்தினை அடிப்படையாகக் கொண்டது." இந்த வரிகள் மூலம் உங்களின் இசைப்புலமையும் வெளிப்படுகிறது !! (இன்னொரு முகம் )
நன்றி!!

அண்ணாமலை..!! said...

ரொம்ப அமைதியான அழகான பாட்டுங்க!
தலைவர் படத்தை வச்சுட்டீங்க!
நான் ஃபாலோ பண்ணிக்குறேன்!
ரத்தத்தின் ரத்தமே!
:)

சாஷீ said...

அருமையான பாடல் .நல்ல ரசனை

Post a Comment