Thursday

தலைவர் கலைஞருக்கு நன்றி!

தமிழக அரசின் இலவச தொலைகாட்சிப் பெட்டி என் மாதிரியான எழைக்கும் கிடைத்து விட்டது என்பதை தலைவர் கலைஞர் அவர்களுக்கும், வலைபேசும் தமிழுலகத்திற்கும் இதயம் இனிக்க, கண்கள் பனிக்க தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மட்டும் இந்த பெட்டி கிடைத்திடவில்லை நண்பர்களே!, எங்கள் பகுதியில் இருக்கு அத்தனை ஏழைகளுக்கும் கிடைத்திருக்கின்றது.

எங்கள் பகுதியின் ஏழ்மை எத்தகையது என்பதை இதை வாசிக்கும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். வீட்டுக்கு இரண்டு கார்கள் இருந்தாலும் பொருளாதார நெருக்கடியால் ஒருவர் ஒரு காரில் மட்டுமே பயணம் செய்யும் துர்பாக்கியசாலிகள். தமிழக அரசின் கடைக்கண் இந்த மாதிரியான சமூகத்தினர் மீதும் பதிந்திருப்பதை நினைக்கும் போது தமிழகத்தில் சமூகநீதி எந்த அளவுக்கு பேணப்படுகிறது என்பதை நினைத்து அனைவருமே பெருமைப் படவேண்டும்.

இத்தனை இருந்தும், விடுமுறைகளில் வரும் பேரன்கள் கொண்டுவரும் xbox இதில் இனைத்து விளையாடமுடியுமா என்பதே இப்போதைக்கு என் அம்மாவின் கவலையாயிருக்கிறது.இதையெல்லாம் ”எல்காட்”டின் அப்போதைய சேர்மனான உமாசங்கர் யோசித்திருப்பாரா தெரியவில்லை,அவர் மீதான நடவடிக்கைகளுக்கு இதையும் ஒரு காரணமாக நாளைக்கு தலைவர் தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டிட விரும்புகிறேன்.

அடுத்த தேர்தலுக்கு குட்டியாக வீட்டுக்கொரு ஃப்ரிட்ஜ் கொடுக்கலாம் என்பதும் என் தாயாரின் ஆலோசனை!, தலைவர் கலைஞர் இதையெல்லாம் சிந்தித்து அடுத்த இலவசத்தை அறிவிக்க எல்லாம் வல்ல ஜெயலலிதா நாச்சியார்(எத்தனை நாளைக்குத்தான் அம்மான்னே சொல்றது!) அருள் புரியட்டும்.

4 comments:

மங்கை said...

ரெண்டு ஃப்ரிட்ஜ் இருந்தாலும் இவங்களுக்கு பத்தாதுன்னு நான் இப்ப கண் கூடா பார்த்துட்டு வரேன் எங்க வீட்ல

தமிழ் அமுதன் said...

கண்டு புடிச்சுடோம்ல...!;;)

jagadeesh said...

நம்ம பணம் தான் நமக்கு திரும்ப வந்திருகிறது. அவர்கள் பையில் இருந்த காசை கொடுத்து வாங்கிவிட வில்லை.
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், ஒரு அரசு உருவாக மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள். அந்த ஆளும் கட்சி, தேர்தல் சமயத்தின் போது, இலவசங்களை கொடுத்து ஒட்டு கேட்பது என்பது ஒரு வேக்ககேடான செயல். இதன் மூலமே அந்த அரசு ஒழுங்காக தர்மபடி நடந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். இதில் என்ன கொடுமை என்றால், இது வேற எதாவது நாட்டில் நடந்திருந்தால் அந்த மக்கள் நித்யம் அந்த அரசை தூக்கி வீசி எறிந்திருப்பார்கள். அந்த கட்சியை துச்சமாக நினைப்பார்கள், அவர்கள் ஆளும் கனவு அன்றே முடிந்து விடும், அனால் நாமோ, இலவசங்கள் என்றல் பல்லை இளித்து கொண்டு அதை ஆதரிக்கிறோம். ஒரு அரசு தன் மக்கள், தானே சம்பாதிக்கும் படி நடவடிக்கைகளை யும், வேலை வாய்ப்பையும் உருவாக்கி, ஒரு குடிமகனை நல்ல பொறுப்புள்ள ஆளாக்கி, தானே தன சம்பாத்தியத்தில் டிவி வாங்க வைக்கவேண்டும். இதை நீங்கள் நகைச்சுவைக்காக கூட எழுத வேண்டாம்.

சித்தன்555 said...

தலைவர் கலைஞருக்கு நன்றி சொன்னதுக்கு நன்றி.

Post a Comment